
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில்அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், கருண் நாயர், வருண் சக்ர்வர்த்தி, யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மீண்டும் வருவது கிரிக்கெட்டுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது, இது ஒருநாள் வடிவத்திற்கு ஆழத்தையும் சூழலையும் சேர்க்கிறது.