
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது நாளை மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. அதன்படி, நளை நடைபெறும் எஸ்ஏ20 மூன்றாவது சீசனின் முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலகின் முன்னணி வீரர்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறும் இடம், போட்டி நேரம், இந்திய ரசிகர்கள் இத்தொடரை எவ்வாறு பார்பது மற்றும் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்கள் என மொத்த விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம்.