தோனி சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது - சர்ச்சையை கிளப்பும் முன்னால் பாக். வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, உலக அளவில் தலைசிறந்த கேப்டனாகவும், பெஸ்ட் பினிஷராகவும், மின்னல் வேக விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வந்தார். இவர் ஸ்டெம்பிற்கு பின்னால் நின்றால், எப்பேர்ப்பட்ட பேட்டரும் நடுங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். கிறிஸைவிட்டு ஒரு அடி நகர்ந்தாலும் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து, பேட்டரை வெளியேற்றிவிடுவார். அந்த அளவுக்கு துல்லியமாக விக்கெட் கீப்பிங் செய்ய கூடியவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்ச்களும், 38 ஸ்டெம்பிங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 123 ஸ்டெம்பிங்களும், 321 கேட்ச்களையும் பிடித்து அசத்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 57 கேட்ச்கள், 34 ஸ்டெம்பிங்களை இந்திய அணிக்காக செய்திருக்கிறார்.
Trending
இப்படி விக்கெட் கீப்பிங்கில் சிறந்த ரெக்கார்ட் வைத்திருக்கும் மகேந்திரசிங் தோனியின் கீப்பிங் குறித்து யாரும் இதுவரை பெரிய அளவில் குறைசொன்னது கிடையாது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஷித் லத்திஃப், தோனியின் விக்கெட் கீப்பிங்கில் பெரும் குறை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள லத்திஃப், “விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி, கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஆள்தான். இருப்பினும் புள்ளி விபரப்படி பார்த்தால், அவர் சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது. இதுவரை 21 சதவீத கேட்ச்களை அவர் கோட்டைவிட்டுள்ளார். அவர் அதிக கேட்ச்களை பிடித்திருக்கிறார் எனக் கூறுபவர்கள், அவர் தவறவிட்ட கேட்ச்கள் எத்தனை, ஸ்டெம்பிங்கள் எத்தனை என்பது குறித்து பேசுவது கிடையாது.
கடந்த 15 வருடங்களில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என என்னிடம் கேட்டால் குவின்டன் டி காக்கைத்தான் சொல்வேன். மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இவர் சிறந்த பினிஷர் கிடையாது. சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். அவருக்கு முன் மார்க் பவுச்சர், குமார் சங்கக்கரா ஆகியோர் சிறந்த விக்கெட் கீப்பர்களாக இருந்தனர்” எனத் தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now