Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!

எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2025 • 08:04 PM

இலங்கை அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் மற்றும் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை அணிக்காக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் முக்கிய பங்கு வகித்திருந்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2025 • 08:04 PM

இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகாளில் விளையாடி 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 8167 ரன்களையும், பந்துவீச்சில் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், “நான் மிகவும் விரும்பப்படும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு விடைபெற வேண்டிய நேரம் இது! இலங்கைக்காக கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை. ஒருவர் தேசிய ஜெர்சியை அணியும்போது ஏற்படும் தேசபக்தி மற்றும் அடிமைத்தன உணர்வை எதுவும் ஈடுசெய்ய முடியாது. நான் கிரிக்கெட்டிற்காக எனது அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

அதற்கு ஈடாக கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இன்று நான் இருக்கும் நபராக என்னை மாற்றியுள்ளது. எனது விளையாட்டுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் எனது உயர்ந்த மற்றும் தாழ்ந்த காலங்களில் எனது வாழ்க்கை முழுவதும் எனக்காக இருந்த ஆயிரக்கணக்கான இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பணம் முடிந்தாலும், இதன் மீதுள்ள ஆர்வம் அப்படியே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

 

Also Read: LIVE Cricket Score

தற்சமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ஏஞ்சலோ மேத்யூஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதை தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 சதம், 40 அரைசதங்களுடன் 5916 ரன்களை எடுத்துள்ளார். மேலும் அவர் கடந்த 2023அம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement