
ஆசியக் கோப்பை 2022இன் முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் பட்டைய கிளப்பிய இந்திய அணி, அடுத்து படுமோசமாக சொதப்பியது. இந்திய அணி லீக் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு, அடுத்து சூப்பர் 4 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக தோற்றதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
அணியில் மிகமுக்கிய ஆல் ரவுண்டராக இருந்த ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகினார். அடுத்து ஆவேஷ் கானுக்கு காயம் ஏற்பட்டதால் அவரும் சூப்பர் 4 ரவுண்டில் பங்கேற்கவில்லை. இதனால், பந்துவீச்சுல் துறையில் இந்திய அணியில் பலம் குறைவாகத்தான் இருந்தது. குறிப்பாக டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் சிங்கை மட்டுமே நம்பியிருக்கும் நிலை இருந்தது. புவனேஷ்வர் குமார் பவர் பிளேவில் மட்டுமே அபாரமாக பந்துவீசி வந்தார்.
மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்திக் பாண்டியாவைத்தான் ரோஹித் சர்மா நம்பினார். ஹார்திக் ஸ்விங் பௌலரும் கிடையாது, அடிக்கடி பவுன்சரை வீசுபவரும் கிடையாது. லெந்த் பால்களை மட்டுமே சிறப்பாக வீசுவார். இப்படி அர்ஷ்தீப் சிங்கை தவிர மற்ற இரண்டு பந்துவீச்சாளர்களும் மாபெரும் குறை இருந்ததுதான் சூப்பர் 4 சுற்றில் தோற்க முக்கிய காரணம்.