
தற்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் உலகத் தரமான சுழற் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்மையான இடத்தில் இருக்கிறார். அவருடைய போட்டியாளரான ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதில் ஒரு வேதனையும் வியப்பமான விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவர் மட்டும் தான் இருக்கிறார்கள்.
நாதன் லயன் தற்பொழுது 500ஆவது டெஸ்ட் விக்கட்டை உள்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கைப்பற்றி விட்டார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 95 டெஸ்ட்களில் 179 இன்னிங்ஸ்களில் 490 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்பொழுது அஸ்வின் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை மிக அருகில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த மாதம் இறுதி முதல் விளையாட இருக்கிறது. உள்நாட்டில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் வெகு எளிதாக அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை பெற்றுவிடுவார் என்பது உறுதி.