
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை மாலை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அதே புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. இதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக விளையாடப்போகும் கடைசி தொடரும் இதுவே ஆகும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் ஒரு செயலை மட்டும் சமாளிப்பது கஷ்டம் என தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணியின் ஓப்பனிங் பவுலர்களை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும். பவர் ப்ளேவில் அவர்கள் பந்தில் நல்ல ஸ்விங்கை ஏற்படுத்துவார்கள். அது தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் செய்வதை விட சிறப்பாக இருக்கும்.