
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேஎல் ராகுல் தான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலை நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பினை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது சிறப்பு காணொளியின் மூலம் அறிவித்துள்ளது. அதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.