
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்கவுள்ளது. 1992ஆம் ஆண்டு முதல் 8 முறை தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒரு முறை வென்றதில்லை. அதில் 7 முறை தென் ஆப்பிரிக்கா அணியே வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களை பொறுத்தவரை பிட்சில் நல்ல வேகமும், பவுன்ஸ்-ம் இருக்கும். இந்திய ஆடுகளங்களை போல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை, போல் தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இருக்காது. குறிப்பாக வழக்கத்தை விட அதிகளவில் பவுன்ஸ் இருக்கும். பெரும்பாலும் நல்ல டெக்னிக்குடன் பேட்ஸ்மேன்கள் இல்லையென்றால், 2 செஷன்களில் கடப்பதே பெரிய விஷயமாக அமையும்.
இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எப்படி தென் ஆப்பிரிக்காவின் ஆக்ரோஷமாக பவுலர்களை சமாளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசுகையில், “தென் ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் நிச்சயம் பவுன்ஸ் இருக்கும். அதாவது இந்திய ஆடுகளங்களில் பந்துகள் ஆகும் பவுன்சை விடவும் கைகளை மேல் உயர்த்தினால் எவ்வளவு ஆகுமோ, அந்த அளவிற்கு பந்துகள் பவுன்ஸாகும்.