
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மோத உள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு முன்பு ஆசிய கோப்பை நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
இந்த நிலையில் 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஸமாம் உல் ஹக் அறிவித்திருக்கிறார். அதன்படி பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷான் மசூத் அதிரடியாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஷான் மசூத் இதுவரை 9 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். நடப்பாண்டில் அவர் நான்கு போட்டிகளில் விளையாடி மொத்தமே 52 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இதில் ஒரு ஆட்டத்தில் 44 ரன்கள் அதிகபட்சமாக அவர் அடித்திருந்தார். இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று பஹிம் அஷ்ரஃப் என்ற ஆல்ரவுண்டர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு திரும்பியிருக்கிறார். இது குறித்து பேசிய இன்ஸமாம் உல் ஹக், உலக கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.