நட்சத்திர வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு வழங்குவது ஏன்? ரசிகர்கள் கேள்வி !
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் பேசுபோருளாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Trending
இந்நிலையில் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா தொடரில் ரோஹித், ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 22ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஓய்வு வழங்குவதன் அவசியம் என்ன என்று பலத்தரப்பு ரசிகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடாத ரோஹித் சர்மா, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொரோனா தொற்று காரணமாக இடம்பெறவில்லை. இதனால், ஐபிஎல் தொடருக்கு பிறகு கடந்த 40 நாளாக ஓய்வில் இருக்கும் ரோஹித், தற்போது தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு வழங்குவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள், பிறகு ரோஹித் சர்மா எப்படி தான் கேப்டன் பதவியில் இருந்து அணியை வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 போட்டியில் விளையாட முடியும் ரோஹித்தால் நாட்டுக்காக தொடர்ந்து விளையாட முடியாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதே போன்று விராட் கோலிக்கும் ஓய்வு வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கோலி 20 ரன்களை தாண்டவில்லை. அப்படி இருக்க கோலிக்கு தொடர்ந்து ஓய்வு வழங்கினால் அவர் எப்படி பார்முக்கு திரும்புவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிஷப் பந்த் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு வழங்குவது முக்கியம். வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கூட காயம் ஏற்படுவதை தடுக்க ஓய்வு வழங்கி இருக்கிறோம் என்று கூறினால் அதை ஏற்று கொள்ளலாம்.
ஆனால் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், சீனியர் வீரர்களின் பனிச்சுமையை குறைக்க தான் இந்த ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது ரசிகர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now