
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியது.
இதில் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
கடந்த 2 போட்டிகளிலும் டாஸ் வென்ற அவர் இப்போட்டியிலும் ஹாட்ரிக் முறையாக டாஸ் வென்றது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்த நிலையில் இந்த முக்கிய போட்டியில் ஒரு மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார். அதாவது அக்சர் படேலுக்கு பதிலாக இளம் ஆல் ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள தீபக் ஹூடா சேர்க்கப்படுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். ஏற்கனவே மிடில் ஆடரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறும் நிலையில் எதற்காக அவர் நீக்கப்பட்டார் என்பதை ரோஹித் தெரிவிக்கவில்லை.