சச்சின், யுவராஜ் அசத்தல்; இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த லெஜண்ட்ஸ் லீக் தொடரின் 14ஆவது போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது மழை குறுக்கீடு இருந்ததால் ஆட்டம் 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
Trending
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய லெஜண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் நமன் ஓஜா 20 நிதானமாக விளையாடிய நிலையில் மற்றொரு, தொடக்க வீரர் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இறுதியில் 20 பந்துகளில் தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்ஸர்களை விளாசி 40 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார்.
இதனைத் தொடர்ந்து ரெய்னா 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்து வந்த யூசுப் பதான், யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார்கள். இதில் யூசுப் பதான் 11 பநுதகளில் 3 சிக்ஸ்ர்கள் உட்பட 27 ரன்களை எடுத்தார். யுவராஜ் சிங் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்களை விளாசினார்.
இறுதியில் ஸ்டூவர் பின்னி 18, இர்பான் பதான் 11 ஆகியோ் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய லெஜண்ட்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 170/5 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியில் ஒருவர் கூட 30+ ரன்களை அடிக்கவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மஸ்டர்ட் 29 ரன்களும் அடுத்து ட்ரேம்லெட் 24ரன்களும் எடுத்தனர்.
மற்றவர்கள் 20+ ரன்களைக் கூட தொடவில்லை. இதனால், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து லெஜண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now