
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த 05ஆம் நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று பகல் 11:30 மணி முதல் தாக்கா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்குள் 271 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக சதம் விளாசிய மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களும், அரைசதம் அடித்த மஹ்முதுல்லா 77 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 272 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது.