
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த டி20 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நான்கு அணிகளும் காலிறுதி சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. மற்ற அணிகள் லீக் சுற்றில் விளையாடின.
இந்திய அணி காலிறுதியில் நேபாள், அரையிறுதியில் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இன்று இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் இந்திய அணி முதலில் டாசில் வெற்றி பெற்று பந்து வீசியது. ஆஃப்கானிஸ்தான் 18.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்த பொழுது குறிப்பிட்ட மழை அதற்குப் பிறகு நிற்கவேயில்லை.
இதன் காரணமாக போட்டி அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டு இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. காரணம் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் புள்ளி பட்டியலில் மிகவும் வலிமையான இடத்தில் இருந்தது. ஆஃப்கான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.