பயோ பபுளில் இருக்க சீனியர் வீரர்கள் விரும்பவில்லை - ஜேம்ஸ் பாமென்ட்
பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்தியாவின் சீனியர் வீரர்கள் விரும்பவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. ஆனால் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து இத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் வீரர்கள் சிலர் பயோ பபுள் சூழலில் இருக்க விரும்பவில்லை என்ற அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர் “ஐபிஎல் தொடரின் போது பயணங்கள்தான் சவாலானதாக இருந்தது. அந்த நேரத்தில்தான் இந்திய வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால் ஒரு சில சீனியர் வீரர்கள் பயோ பபுளில் இருக்க விரும்பவில்லை. அது சில கவனச் சிதறலை ஏற்படுத்தியது.
இந்திய ரசிகர்களுக்காக இந்தியா நடத்துகின்ற தொடர் என்பதால் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடுவதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now