
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மோசமாக திணறியது.
அந்த அணியில் டாப் லாதம் (1), வில் யங் (1), வில்லியம்சன் (2), டெவோன் கான்வே (3), டேர்யில் மிட்செல் (3) என முக்கிய வீரர்களே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சை சமாளிக்கவே முடியவில்லை. கடைசி நேரத்தில் டி கிராண்ட் ஹோம் மட்டும் 42 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸில் அந்த அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ, நியூசிலாந்தே பரவாயில்லை என்பது போன்று செய்துவிட்டது. தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் (24), சாக் க்ராவ்லே (43) மட்டுமே ரன் அடிக்க, மற்ற அனைவருமே ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். முதல் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 116/7 ரன்களை மட்டுமே சேர்த்தது. முதல் நாளன்றே நியூசிலாந்து (10 ) மற்றும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் என மொத்தம் 17 விக்கெட்கள் சரிந்து சுவாரஸ்யமே இன்றி சென்றது.