
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதவிருந்ததாக இருந்தது. ஆனால், டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் மைதானத்தின் ஆடுகளம் தாா்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டன. இறுதி ஆட்டத்தைக் காண ஆவலோடு வந்த ரசிகா்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் மைதான வளாகத்திலேயே ஒதுங்கி காத்திருந்தனா்.
இரவு 9.40 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்கினால் ஓவா்கள் குறைக்காமல் விளையாடப்படும் என்றும், நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவா்கள் வீதம் ஆடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால், இறுதி ஆட்டம் ‘ரிசா்வ்’ நாளான திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக இரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
ஒருவேளை, திங்கள்கிழமையும் ஆட்டத்தை நடத்த முடியாமல் போகும் சூழலில், விதிகளின்படி லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். அந்த வகையில் குஜராத் அணி மீண்டும் சாம்பியனாகி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும். இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி இன்றும் நடைபெறாமல் போனால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தெரிவித்துள்ளார்.
Hopefully, full game tomorrow. In the unlikely situation that we can't get even a 5 overs a side game, there will be a super over. If even that is not possible, the team that finished higher at the end of the league stage is declared the winner
— Harsha Bhogle (@bhogleharsha) May 28, 2023