வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் பலம் குன்றிய அணி என்பதால் அவர்களை வீழ்த்தி நானும் ரௌடி தான் என்று இந்திய அணி நிரூபிக்க தயாராக இருக்கிறது. முக்கியமான பெரிய தொடருக்கு எல்லாம் கடைசி நேரத்தில் சென்று மிதி வாங்கிக் கொண்டு வந்த இந்திய அணி இம்முறை ரசிகர்களின் நம்பிக்கை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணியின் முதல் குழு தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்றுள்ளது.
Trending
இதில் இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே உள்ளிட்ட சில வீரர்கள் சென்றிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இரண்டாவது குழு ஜூலை மூன்றாம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதி குழு ஜூலை 5ஆம் தேதியும் வெஸ்ட் இண்டீஸ் க்கு செல்ல இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் க்கு செல்ல பெரிய அளவில் விமானங்கள் இல்லையாம். இதனால் ஒரே அணியாக அனுப்பாமல் பிசிசிஐ 3 குழுக்களாக அனுப்பி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி முதலில் பயிற்சி முகாமில் 5 நாட்கள் பங்கேற்கிறது.
இதில் ரஹானே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடர்ந்து வலை பயிற்சிகளை மேற்கொண்டு தங்களது பேட்டிங் குறைகளை நிவர்த்தி செய்வார்கள். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் வீரர்களுடன் பயிற்சி ஆட்டம் நடக்க இருக்கிறது. அதில் இந்திய அணி முன்னணி வீரர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகிவிடும். வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி டாமினிகா வில் நடைபெறுகிறது. இங்கு விராட் கோலியை தவிர வேறு எந்த வீரர்களும் தற்போது உள்ள அணியில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now