
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது சீசன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளையும், ஷோக்கீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து மும்பை அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 இன்னிங்ஸ்களுக்கு பின் ரோஹித் சர்மா அரைசதம் விளாசியதால், மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியையும் மும்பை அணி பதிவு செய்தது. இந்த வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “முதல் போட்டியில் இருந்தே வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகிறோம். முதல் வெற்றி எப்போதும் ஸ்பெஷலானது தான். அண்மையில் டெல்லி மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஆடி இருந்தோம்.