
Focusing on the areas to bowl, working on batting helped me in Women's Asia Cup: Deepti Sharma (Image Source: Google)
எட்டாவது மகளிர் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.