எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவோம் - கேன் வில்லியம்சன்!
எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவதில் உறுதியாக இருக்கவேண்டும். இது எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகிறது என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துளளார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் 2019ஆம் ஆண்டு கடந்த முறை இங்கிலாந்து நியூசிலாந்து மோதிக்கொண்ட இறுதிப்போட்டிதான் உச்சமான இறுதிப் போட்டியாக இருக்கிறது. பல்வேறு திருப்பங்களைக் கொண்ட அந்தப் போட்டியில், இறுதியாக இரண்டு முறை ஸ்கோர் சமனில் முடிய, அதிக பவுண்டரி அடிக்கப்பட்ட அணி வென்றதாக இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை கொடுக்கப்பட்டது.
இது எல்லா நேரத்திலுமே சர்ச்சையான ஒரு முடிவாகவே கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது. இந்த விதி தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. இறுதிவரை யார் வெற்றி, தோல்வி? என்று தெரியும் வரை சூப்பர் ஓவர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டியின் மூலமாக 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை துவங்கி வைக்க இருக்கின்றன.
Trending
பலத்த எதிர்பார்ப்புடன், தனிப்பட்ட அதிரடியான அணுகு முறையுடன் இங்கிலாந்து அணி களம் இறங்க இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை வெல்லுவதற்கான வாய்ப்பில் முதல் அணியாக இங்கிலாந்தை நிறைய பேர் கணித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் உலகக்கோப்பையில் யாருக்கு வேண்டுமானாலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து இதுவரை இருந்து வந்திருக்கிறது. எனவே இன்றைய போட்டி மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன், “நீங்கள் குறிப்பிட்டது போல நீங்கள் புதிதான ஒரு நிகழ்வுக்குள் வருகிறீர்கள். எல்லோரும் நிச்சயமாக ஆரம்பத்தில் இருந்து துவங்கி மீண்டும் ஆரம்பிப்பார்கள். நீங்கள் ஒரு தொடரில் இருந்து இன்னொரு தொடருக்கு செல்கிறீர்கள். இதனால் அணிகள் மாறுகின்றன எதிரணி வீரர்கள் மாறுகிறார்கள் மேலும் கண்டிஷன் மாறுகிறது.
எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவதில் உறுதியாக இருக்கவேண்டும். இது எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகிறது. நாங்கள் பங்கேற்ற பல போட்டிகளில் பல மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் இங்குள்ள புது சவால்கள் குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மற்ற போட்டிகளை விட இந்தியாவில் இன்று ஒரு சிறந்த செயல்பாட்டை கொண்டு வர வேண்டும். இங்கு விளையாட்டு என்பது பெரிதும் விரும்பப்படுகிறது. பலரால் ஆதரிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் இதில் ஈடுபடுவதை உற்சாகமாக எதிர்நோக்குகிறோம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now