
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் படுமோசமான தோல்வியைத் தழுவி ஒயிட்வாஷும் ஆனது.
மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இங்கிலாந்து அணி இவ்வாறு அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ஜோஸ் பட்லாரின் முடிவுகள் மற்றும் பேட்டர்கள் சோபிக்க தவறியது, பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது, ஃபீல்டிங்கில் சொதப்பியது என ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி சோபிக்கா தவறியுள்ளது.
இதனால் அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் பயிற்சியைத் தவிர்த்து கோல்ஃப் பயிற்சியில் ஈடுபட்டதே இந்த படுதோல்விக்கு காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சென் ஆகியோர் காடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.