Advertisement

அரசியல் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு!

இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

Advertisement
அரசியல் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு!
அரசியல் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 29, 2023 • 12:09 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆந்திராவைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர், அதன் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பத்தி ராயுடு 19 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியனானது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 29, 2023 • 12:09 PM

இந்த தொடருடன் அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 204 போட்டிகளில் விளையாடி 4332 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஒரு சதமும், 22 அரைசதமும் அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அம்பதி ராயுடு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்று கூறப்பட்டது.

Trending

இந்த நிலையில் தான் அம்பதி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் இருந்தனர். தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அம்பாதி ராயுடு வரும் நாடாளமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அம்பத்தி ராயுடு குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், மசூலிப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதியில் அவர் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், ராயுடு அரசியலில் நிலையான இடம் பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement