Advertisement

உடல் நலக்குறைவால் முன்னாள் ஆல் ரவுண்டர் சலீம் துரானி மறைவு!

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சலீம் துரானி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

Advertisement
Former India Cricketer Salim Durani Passes Away At 88
Former India Cricketer Salim Durani Passes Away At 88 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 02, 2023 • 02:02 PM

கடந்த 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் பிறந்தவர் சலீம் துர்பானி. கடந்த 1953 ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். இதையடுத்து 1954 - 56 ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். இதையடுத்து, 1956 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றார். உள்ளூர் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 02, 2023 • 02:02 PM

என்னதான் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பிறந்திருந்தாலும் அவர் இந்திய நாட்டிற்காக விளையாடினார். சலீம் துரானி 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 1,202 ரன்களும் எடுத்துள்ளார். இதில், ஒரு முறை சதமும், 7 முறை அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.  

Trending

கடந்த 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சலீம் துரானி, 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சலீம் துரானி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் 88 வயதான சலீம் துரானி வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜாம்நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement