Advertisement

ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!

மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.

Advertisement
Former Indian cricketer Ambati Rayudu will join politics
Former Indian cricketer Ambati Rayudu will join politics (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 30, 2023 • 12:42 PM

அண்மையில் நடந்து முடிந்த  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணி பட்டம் வென்றதோடு, அதிரடி வீரர் அம்பாதி ராயுடு ஓய்வையும் அறிவித்தார். இறுதிப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பாதி ராயுடு, இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 30, 2023 • 12:42 PM

இந்த நிலையில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு அமெரிக்காவில் நடக்கும் மேஜர் டி20 லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்திய வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடியும். இதனால் மேஜர் லீக் தொடரில் விளையாடுவதற்காக ராயுடு ஓய்வை அறிவித்ததாக பார்க்கப்பட்டது.

Trending

ஆனால் அம்பாதி ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு பின் இன்னொரு காரணமும் இருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை ஐபிஎல் கோப்பையுடன் சென்று அம்பாதி ராயுடு சந்தித்தார். இதனால் அம்பாதி ராயுடு விரைவில் அரசியலில் ஈடுபடலாம் என்று பார்க்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு மக்களை சந்தித்தார். அப்போது அம்பாதி ராயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன். அதற்கு முன்னதாக மக்களிடன் பிரச்சனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களின் பிரச்சனைகளுக்கு முடிவுக்கு கொண்டு வர சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும். எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அம்பாதி ராயுடு குண்டூர் தொகுதியை சேர்ந்தவர். இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மச்சிலி பட்டணத்தில் அம்பாதி ராயுடு போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அம்பாதி ராயுடுவின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் அசாருதீன், அவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement