
Former Ireland and England seamer Boyd Rankin retires from international cricket (Image Source: Google)
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் போய்ட் ரான்கின். உலகில் இரு நாடுகளுக்கு விளையாடிய 18 வீரர்களில் இவரும் ஒருவர்.
கடந்த 2003ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரான்கின், இதுவரை அந்த அணிக்காக 153 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதேசமயம் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் மூலம் இவர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர்.