Advertisement

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நேபாள் வீரர்; குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நேபாள் வீரர்; குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நேபாள் வீரர்; குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 29, 2023 • 10:25 PM

நேபாள் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளருமானவர் சந்தீப் லமிச்சானே. இவர் இதுவரை 51 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி20 போட்டிகளிலும், 9 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் 210 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 29, 2023 • 10:25 PM

தற்போது, 23 வயதான சந்தீப் லமிச்சனே கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்ற நிலையிலும், ஜனவரி மாதம் நேபாள உச்சநீதிமன்றம் சந்தீப்பின் காவலை தளர்த்தியதால் அவர் நேபாள் அணியில் தொடர்ந்து விளையாடினார். 

Trending

இந்நிலையில் தற்போது சந்தீப் லமிச்சனேவை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது காத்மண்டு மாவட்ட நீதிமன்றம். இன்று வழக்கின் விசாரணையில், காத்பண்டு மாவட்ட நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஷிஷிர் ராஜ் தாகல் லாமிச்சானே மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார். இருப்பினும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர் மைனர் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனை தொடர்பான விசாரணை அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement