Advertisement

பாலியல் வழக்கில் சந்தீப் லமிச்சானேவிற்கு 8 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிற்கு நேபாள் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
பாலியல் வழக்கில் சந்தீப் லமிச்சானேவிற்கு 8 ஆண்டுகள் சிறை!
பாலியல் வழக்கில் சந்தீப் லமிச்சானேவிற்கு 8 ஆண்டுகள் சிறை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 10, 2024 • 06:55 PM

நேபாள் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளருமானவர் சந்தீப் லமிச்சானே. இவர் இதுவரை 51 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி20 போட்டிகளிலும், 9 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் 210 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 10, 2024 • 06:55 PM

மேலும் சமீபத்தியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சானே. பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதே போன்று கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்றார்.

Trending

ஆனால், 2018 ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019 ஆம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. தற்போது, 23 வயதான சந்தீப் லமிச்சனே கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார். 

வழக்கு நடைபெற்ற நிலையிலும், சில மாதங்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேபாள் நீதிமன்றம் சந்தீப் லமிச்சனேவிற்கு தண்டனையை அறிவித்துள்ளது. அதன்படி, ஷிஷிர் ராஜ் தாகலின் அமர்வு இன்று விசாரணைக்குப் பிறகு இழப்பீடு மற்றும் அபராதத்துடன் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதாக நீதிமன்ற அதிகாரி ராமு சர்மா உறுதி செய்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement