
ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அறிமுக வீரர்களான ஃபிரெசர் மெக்கர்க், ஸேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோரிஸ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளடு.