ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த பிரேசர் மெக்குர்க்!
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரெலியாவைச் சேர்ந்த ஜேக் பிரேசர் மெக்குர்க் புதிய உலக சாதனைப் படைத்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட் எனப்படுவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தின் பெயராகும். இது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒருங்கிணைந்த பெயர். தற்பொழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 வயதான ஜேக் பிரேசர் மெக்குர்க் எனும் வீரர் ஆஸ்திரேலியா உள்நாட்டு அணியான ரெட்பேக்ஸ் அணிக்காக டாஸ்மெனியா அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் சதம் அடித்து உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
இப்போட்டியில் முதல் 50 ரன்கள் 18 பந்துகளில் அடித்திருக்கிறார். இதற்கு அடுத்த 50 ரன்கள் 11 பந்துகளில் அடித்து நொறுக்கி இருக்கிறார். இதில் ஒரு ஓவரில் மொத்தம் 32 ரன்கள் கொண்டு வந்து உள்நாட்டு சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிவேக சதம் அடித்திருந்த உலகச் சாதனையை இந்த வீரர் முறியடித்து இருக்கிறார்.
Trending
இந்தப் போட்டியில் ரெட்பேக்ஸ் அணி டாஸ்மெனிய அணிக்கு எதிராக ஒன்பது விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய உள்நாட்டு லிஸ்ட் ஏ போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகி இருக்கிறது. இந்தப் போட்டியில் பிரேசர் மெக்குர்க் மொத்தம் 38 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் உடன் 125 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் இவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்திருக்கிறார். மேலும் தனது அணி ஆஸ்திரேலிய லிஸ்ட் ஏ போட்டிகளில் உள்நாட்டு சாதனை படைக்கவும் உதவி இருக்கிறார்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள்
- பிரேசர் மெக்குர்க் 29 பந்துகள்
- ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகள்
- கோரி ஆண்டர்சன் 36 பந்துகள்
- கிரகாம் ரோஸ் 36 பந்துகள்
- ஷாஹித் அஃப்ரிடி 37பந்துகள்
Win Big, Make Your Cricket Tales Now