
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி போராடி வெற்றிபெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டி துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் சொதப்பிய இலையில், மிடில் வரிசை வீரர்கள் முகமதுல்லா 77, மெஹிடி ஹாசன் 100 ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தியதால், 69/6 என இருந்த வங்கதேச அணி இறுதியில் 271/7 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 82, அக்சர் படேல் 56 ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். கட்டை விரல் காயம் காரணமாக அவதிப்பட்ட ரோஹித் ஷர்மா, இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அப்போது கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோஹித் ஒரு சிக்ஸரை மட்டும் அடித்ததால், இந்திய அணி 266/9 ரன்களை மட்டும் சேர்த்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.