
From Getting Clicked With Rahul Dravid In U15 Days To Being Felicitated By Him For 100th Test (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. மேலும் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்நிலையில் நூறாவது போட்டியில் களமிறங்கும் விராட் கோலிக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு தொப்பியை வழங்கி கவுரவித்தார். இதன்மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கு 12ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா கேப்டனாக அவரது முதல் டெஸ்ட் போட்டியிலேயே டாஸ் வென்றுள்ளார்.