சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சதமடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கேப்டன் எனும் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிராட்டினார்.
Trending
அவருக்கு துணையாக விளையாடி வந்த ஷிவம் தூபே 66 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, இறுதியில் மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து இன்னிங்ஸை ஃபினிஷ் செய்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் முரளி விஜய், மேத்யூ ஹைடன் ஆகியோரது சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் சமன்செய்து அசத்தியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக சதமடித்த வீரர்கள்
- முரளி விஜய் - 2 சதங்கள்
- மேத்யூ ஹைடன் - 2 சதங்கள்
- ருதுராஜ் கெய்க்வாட் - 2 சதங்கள்
- சுரேஷ் ரெய்னா - ஒரு சதம்
- மைக்கேல் ஹஸி - ஒரு சதம்
- அம்பத்தி ராயுடு - ஒரு சதம்
- First CSK Captain to score Hundred.
— Tanuj Singh (@ImTanujSingh) April 23, 2024
- 2nd Most runs in this IPL.
- First Captain score Hundred in this IPL.
- Most runs scorer for CSK in this IPL.
- He has Hundred as a Player & Captain.
Ruturaj Gaikwad breaking records - RUTURAJ, THE STAR. pic.twitter.com/1YdHVw5RaM
அதேசமயம் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் சதமடித்த கேப்டன்கள் வரிசையிலும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் கேஎல் ராகுல் மூன்று சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளா. அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னர், விரேந்திர சேவாக், சஞ்சு சாம்சன் வரிசையில் தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சதமடித்த கேப்டன்கள்
- கேஎல் ராகுல் - 132* (பஞ்சாப் கிங்ஸ்), 103* (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), 103* (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
- டேவிட் வார்னர் - 126 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
- வீரேந்திர சேவாக் - 119 (டெல்லி கேபிடல்ஸ்)
- சஞ்சு சாம்சன் - 119 (ராஜஸ்தான் ராயல்ஸ்)
- ருதுராஜ் கெய்க்வாட் - 108*(சென்னை சூப்பர் கிங்ஸ்)
Win Big, Make Your Cricket Tales Now