
இந்திய அணியில் தோனியை மறைமுகமாக தாக்குபவரும், சர்ச்சை கருத்துகளை கூறுபவருமாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது தனது கவனத்தை விராட் கோலியின் மீது திருப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட்டே கோலி மட்டும் தான் என்பது போல விளம்பரப்படுத்துவதாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வீரர்கள் சூப்பர் ஸ்டார்களை போன்று புகழ்பெறுகின்றனர். 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கபில் தேவ், அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர், தோனி என வரிசையாக இருந்தனர். தற்போது அப்படி இருப்பது விராட் கோலி தான். ஆனால் இவர்களை அப்படி புகழக்கூடாது என கம்பீர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், “ஒரு ஹீரோவை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களை மட்டுமே புகழும் பழக்கம் இந்தியாவை ஆட்டிபடைத்து வருகிறது. முன்பு தோனி இருந்தார், தற்போது விராட் கோலி இருந்து வருகிறார். இதெல்லாம் எப்படி ஏற்படுகிறது? மற்ற வீரர்களெல்லாம் அணிக்காக உழைப்பது யார் கண்களுக்கும் தெரிவதில்லை.