
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளார். மேலும் அவரது தலைமையில் கீழ் இந்திய அணி சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது அவரிடம் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்குப் பின் ராகுல் திராவிட் நியமிக்கப்படப்போவதாகத் தகவல் எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கங்குலி,“ராகுல் டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். அவர்தான் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் என்சிஏவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதாக நாங்கள் நம்புகிறோம். என்சிஏ அமைப்பு அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குகிறது.