
நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-1 என தொடர் சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித்(27), மேக்ஸ் ஓ டௌட் (38) ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் அடித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய மூசா அகமது 29 ரன்களும், ஆக்கர்மேன் 37 ரன்களும் அடித்தனர். கேப்டன் எட்வர்ட்ஸ் நன்றாக ஆடி 34 ரன்கள் அடித்தார். இவர்கள் அனைவருக்குமே நல்ல தொடக்கம் கிடைத்தாலும், யாருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாததால் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் உயரவில்லை. இதனால் 50 ஓவரில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 232 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மாதவெர் மற்றும் கிரேக்எர்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். பின் சிறப்பாக விளையாடி வந்த மாதவெர் அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கிரேக் எர்வினும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.