இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வாய்ப்பை உதறிய கேரி கிரிஸ்டன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை என தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் வெளிநாட்டு பயிற்சியாளராகக் குறிப்பிடத் தகுந்த வகையில் செயல்பட்டவர்களில் ஜான் ரைட் மற்றும் கேரி கிரிஸ்டன் இருவரும் மிக முக்கியமானவர்கள். இந்திய கிரிக்கெட் கங்குலி காலத்தில் நவீன கிரிக்கெட் வடிவத்தில் அழுத்தமான மாற்றங்களை பெற தொடங்கிய பொழுது, நியூசிலாந்தின் ஜான் ரைட் தலைமைப் பயிற்சியாளராக இருந்து சிறப்பாக அணிக்கு பங்களிப்பு செய்தார்
இதில் தென் ஆப்பிரிக்க கேரி கிரிஸ்டின் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1993 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமாகி 2004 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியிருக்கிறார்.
Trending
இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆப்பிரிக்க அணிக்காக 35 சதங்களையும் 79 அரை சதங்களையும் விளாசி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட பிறகு 2008 முதல் 2011வரை இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார். அடுத்து 2011 முதல் 2013 வரை தென் ஆப்பிரிக்க சர்வதேச அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார்.
தற்பொழுது இவரை மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் தலைமைப் பயிற்சியாளராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கொண்டுவர ஆலோசித்து இருக்கிறது. தற்பொழுது இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குப் பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இவர் வருவதால், இனி இப்படியான தொடர்களில் அணிகளுக்குப் பயிற்சியாளராக இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை வேண்டாம் என கேர்டி கிரிஸ்ட்ன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸ் இந்த பதவிக்கு போட்டிபோடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Win Big, Make Your Cricket Tales Now