நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று இந்திய அணி சாம்பியன் ஆன டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கொண்டு இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Trending
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து கௌதம் கம்பீர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். வித்தியாசமான தொப்பி அணிந்திருந்தாலும், திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார். மேற்கொண்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்கும் கௌதம் கம்பிர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
India is my identity and serving my country has been the greatest privilege of my life. I’m honoured to be back, albeit wearing a different hat. But my goal is the same as it has always been, to make every Indian proud. The men in blue shoulder the dreams of 1.4 billion Indians… pic.twitter.com/N5YyyrhXAI
— Gautam Gambhir (@GautamGambhir) July 9, 2024
இதனையடுத்து கௌதம் கம்பீரின் பதிவுகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய கௌதம் கம்பீர், 58 டெஸ்ட், 147 ஒருநாள், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இறுதிப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
Win Big, Make Your Cricket Tales Now