SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் நாள் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ருதுராஜ்க் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது, சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மேற்கொண்டு அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டிருந்த ரோஹித் சர்மா, விரட் கோலி ஆகியோரும் தங்கள் முடிவை கைவிட்டுள்ளனர்.
Trending
அத்துடன் இந்த தொடர் முதல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீர்ர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது நேற்றைய தினம் இலங்கை சென்றடைந்தது.
Gautam Gambhir's Era begins! #INDvSL #India #TeamIndia #Cricket pic.twitter.com/O3TfxI6i7S
— CRICKETNMORE (@cricketnmore) July 23, 2024
இந்நிலையில் கௌதம் கம்பீர் தலையின் கீழ் இந்திய அணி வீரர்கள் இன்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் என அனைத்து வீரர்களும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கீழ் தங்கள் முதல் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்த காணொளிகள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now