
கடந்த டி20 உலக கோப்பையின் போது இந்திய அணி காயத்தால் தவறவிட்டதில் பும்ராவின் இழப்பு மிகப்பெரியதாக இருந்தது. அது இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. தற்பொழுது காயத்தில் இருந்து திரும்ப வந்த அவர் ஆசிய கோப்பை தொடரில் மிகச்சிறந்த பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்தார். அவருக்கு அந்தத் தொடரில் பெரிய விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர் பந்துவீச்சு மிகக் கூர்மையாக இருந்தது.
தற்பொழுது உலக கோப்பையில் அவருடைய பந்து வீச்சுக்கு விக்கெட்டுகளும் நல்ல முறையில் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. காயத்திற்கான மறுவாழ்வில் இருந்த அவர் மீண்டு வருவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இன் ஸ்விங் வீசுவதில் சிறப்பான முறையில் தயாராகி வந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 35 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றிய அவர், பேட்டிங் செய்ய சாதகமான டெல்லி ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 39 ரன்களுக்கு நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பும்ரா குறித்து பேசிய கம்பீர், “சென்னை விக்கெட்டில் மார்சை அவுட் செய்த விதம், இன்று டெல்லி விக்கெட்டில் இப்ராகிமை அவுட் செய்த விதம், உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் முழுமையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதை காட்டியது. நிலைமை இப்படி இருக்க நாம் வெகு சீக்கிரத்தில் பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிட்டு பார்த்தோம். ஆனால் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.