
இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் தனது ஆல் டைம் உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தன்னுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்த அணியை உருவாக்கியுள்ளார். இதன்காரணமாக அவர் தேர்வு செய்த இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
ஆனால் அதேசமயம் கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி கம்பீர் தேர்வு செய்த அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றம் மேத்யூ ஹைடனைத் தேர்வு செய்தார். மேலும் மூன்றாவது வரிசை வீரராக தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அதன்பின் நான்காம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவையும், 5ஆம் இடத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ஸையும் தேர்வு செய்த அவர், தனது அணியின் 6ஆம் வரிசை வீரராக பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கையும், 7ஆவது இடத்தில் அப்துல் ரஸாக்கையும் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு அவரது அணியின் சுழற்பந்து வீச்சாளராக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தேர்ந்தெடுத்துள்ளார்.