1-mdl.jpg)
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வெற்றி வாகை சூடியுள்ள இந்தியா வரலாற்றில் தென் ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் 1992 முதல் இதுவரை வென்றதில்லை. எனவே அந்த மோசமான வரலாற்றை இம்முறை இந்தியா மாற்றி சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதன்படி நாளை தொடங்கும் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் பொதுவாக தங்களுடைய சொந்த மண்ணில் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் வரை இந்தியா விளையாடுவது வழக்கமாகும். ஆனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் இருக்கும் மைதானங்களில் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.
அதனால் எவ்வளவு தான் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் போட்டியில் ஜோடியாக விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டிக்கான தம்முடைய 11 பேர் கொண்ட இந்திய பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.