ரிஷப் பந்த தூக்கிட்டு இவர கேப்டனா போடுங்க - கவுதம் கம்பீர்!
டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
மேலும் கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் இறுதிவரை சென்று கோப்பையை நழுவவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் ரிஷப் பந்த்தின் கேப்டன்சியில் பிளே ஆஃபிற்கு முன்னேறி, 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் தோற்று வெளியேறியது.
Trending
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனின் முதல் பாகத்தில் காயம் காரணமாக ஆடாததால், ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரிஷப் பந்த்தின் கேப்டன்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக ஆடினாலும், அவரது கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. இக்கட்டான நேரங்களில் அவரது கேப்டன்சி முடிவுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
ஆனாலும் ரிஷப் பந்த்தின் கேப்டன்சியை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவரும் நிலையில், அவரை கேப்டன்சியிலிருந்தே நீக்கவேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினை டெல்லி அணி தக்கவைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கவுதம் கம்பீர், “அஸ்வினின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர். எனவே அவரை அணியில் தக்கவைப்பது மட்டுமல்லாது, நான் டெல்லி அணியின் அங்கமாக இருந்தால் அடுத்த சீசனில் அஸ்வினை டெல்லி அணியின் கேப்டனாகவே நியமிப்பேன்” என்று தெரிவித்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணியை 2 சீசன்களில் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now