Advertisement
Advertisement
Advertisement

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2024 • 09:54 PM

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2024 • 09:54 PM

மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வந்த விண்ணப்பங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Trending

மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளின் ஆலோசகராக கலக்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை இந்திய அடுத்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும், மேற்கொண்டு கௌதம் கம்பீரின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர், அணியை மீண்டும் சாம்பியனாக்கி அசத்தியுள்ளார். மேலும் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில் கம்பீருக்கு பெரும் பங்குண்டு. அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் வீரராக விளையாடிய கௌதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையடி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement