
நாடு சுதந்திரமடைந்து 75ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்றார். அவா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ஆண்டுதோறும் இனி ஜனவரி 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு குடியரசு தினத்தைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதி தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மகாத்மா காந்தியின் நினைவு தினமான (தியாகிகள் தினம்) ஜனவரி 30ஆம் தேதி நிறைவடையும்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் இந்தியாவுக்குக் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.