
Gayle & Stirling Guide Team Abu Dhabi To A 4 Wicket Win Against Bangla Tigers In Abu Dhabi T10 (Image Source: Google)
கிரிக்கெட்டின் மற்றொரு புதுவரவாக டி10 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
அந்தவகையில் அபுதாபில் இந்தாண்டிற்கான அபுதாபி டி10 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் டீம் அபுதாபி அணி, பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசியது .
அதன்படி களமிறங்கிய அபுதாபி அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கிறிஸ் கெயில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த கிறிஸ் கெயில் 49 ரன்களைச் சேர்த்தார்.