
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க முடியாமல் தவித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் எடுத்த விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது டெஸ்டில் கூட இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து விராட் கோலி 31 ரன்கள் மட்டும் தான் அடித்து இருந்தார்.
தொடர்ந்து விராட் கோலி சொதப்பி வருவதால் தற்போது அணியில் அவருடைய இடத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. சீனியர் வீரர்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்து வருவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், தேர்வு குழுவும் அண்மையில் கூறியிருந்தது .
இது விராட் கோலிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்த ரஹானேவையே ரன் அடிக்கவில்லை என்று கூறி, பிசிசிஐ தற்போது அணியிலிருந்து நீக்கிவிட்டது. இதனால் அந்த நிலை விராட் கோலிக்கு மிக விரைவில் ஏற்பட அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஒருநாள் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார் .