
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று தேதி மதியம் 1.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் வெறும் 77 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் அதை பிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தில் வழக்கம் போல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக யாரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஏலத்தில் முதல் முறையாக பங்கேற்கும் தன்மை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்தார்.