
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 21) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இந்த போட்டியிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அந்தவகையில் ஜெய்லார்ட் கும்பி 3 ரன்னிலும், கேப்டன் கிரேய்க் எர்வின் 5 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் பென் கரண் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ரஸா, பிரையன் பென்னட், மருமணி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்த கையோடு சீன் வில்லியம்ஸ் தனது விக்கெட்டை இழந்தார்.